
லியோ முயற்சியை முறியடிக்க முடியாத விடாமுயற்சி
அஜித்தின் 62வது படமான "விடாமுயற்சி" பற்றிய அறிவிப்பு இரண்டு தினங்களுக்கு முன்பு மே 1ம் தேதி வெளியானது. டுவிட்டர் தளத்தில் அந்தப் படம் பற்றிய பதிவுகள் 24 மணி நேரத்தில் 9 லட்சத்திற்கும் கீழான சாதனையை மட்டுமே எட்டியுள்ளது. இது சூர்யாவின் "கங்குவா" படம் செய்த 9 லட்சத்திற்கும் கூடுதலான பதிவை விடவும் குறைவுதான்.
விஜய்யின் "லியோ" படம் பற்றிய அறிவிப்பு வந்த போது அதன் பதிவு 24 மணி நேரத்தில் 12 லட்சமாக இருந்து புதிய சாதனையைப் படைத்தது. அவ்வளவும் விஜய் ரசிகர்களின் முயற்சிதான். அந்த முயற்சியை அஜித் ரசிகர்கள் "விடாமுயற்சி" செய்து முறியடித்திருக்க வேண்டும். ஆனால், அந்த சாதனையை அஜித் பட அறிவிப்பு நெருங்கக் கூட முடியவில்லை. இதனால், டுவிட்டர் தளத்தில் விஜய்க்குதான் எப்போதும் ஆதரவு அதிகம் என அவரது ரசிகர்கள் இதையும் கொண்டாடி வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!