
வி சென்டிமென்ட்டில் அஜித்
இதுவரையில் அஜித் நடித்து வெளிவந்த படங்களில், “வான்மதி, வாலி, வில்லன், வரலாறு, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், வலிமை” என ஒன்பது படங்கள் வெளிவந்துள்ளன. "விடாமுயற்சி" அந்த "வி" வரிசையில் வர உள்ள பத்தாவது படம்.
மேலே உள்ள "வி" படங்களில் "வரலாறு" தாமதமாக வெளிவந்து சுமாரான வெற்றியைப் பெற்றது. "விவேகம்" படம் தோல்வியைத் தழுவியது. மற்ற படங்கள் அஜித்தின் வெற்றிப்பட வரிசையில் முக்கியமான படங்கள். "விடாமுயற்சி" எப்படிப்பட்ட படமாக அமையப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
படம் வெற்றி பெற்றால், "விடாமுயற்சி - விஸ்வரூப வெற்றி” என அப்போது விமர்சனங்களுக்கு "கேப்ஷன்" போட்டுக் கொள்வார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!