
மாமன்னன் - வடிவேலுவும் ஒரு மன்னன்?
ஏற்கெனவே, இப்படம் பற்றி இதற்கு முன்பு வெளியான சில போஸ்டர்களில் வடிவேலுவின் பெயர்தான் முதலில் இடம் பெற்றிருந்தது. அதற்குப் பிறகு பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் கடைசியாகத்தான் படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம் பெற்றிருந்தது. அதுதான் முதல் பார்வை போஸ்டரிலும் இருக்கிறது.
போஸ்டரைப் பார்க்கும் போது கமல்ஹாசன், சிவாஜிகணேசன் நடித்த "தேவர் மகன்" ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. வடிவேலு கம்பீரமாக அமர்ந்திருக்க, அவருக்குப் பக்கத்தில் உதயநிதி கத்தியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் பார்வை போஸ்டர் வருவது பற்றிய ஒரு போஸ்டரை அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பும் வெளியிட்டிருந்தார்கள். அதிலும் வடிவேலு இடம் பெற்றிருந்தார்.
"மாமன்னன்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வடிவேலுவும் ஒரு "மன்னன்" ஆக இருப்பாரோ ?.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!