
‛‛கார்த்தியிடம் கதை சொல்லி இருக்கிறேன்: விரைவில் இயக்குனராகும் ஜெயம் ரவி
நான் இயக்குநர் மணிரத்னத்திடம் அவ்வப்போது "ஒன்லைனர்" சொல்வேன். அதைக் கேட்ட அவர், "நீ எழுதலாம்" என்றார். அவர் சொன்ன பிறகு என் மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. நடிகர் கார்த்தியிடம் ஒரு கதை சொல்லி இருக்கிறேன். நான் நடித்துள்ள "இறைவன்" படம் முடிந்துவிட்டது. அடுத்து ராஜேஷ்.எம் இயக்கும் படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்போது "சைரன்" படத்தில் நடித்து வருகிறேன். அதற்காகத்தான் இந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக். அதன் திரைக்கதை புதுவிதமாக இருக்கும். அடுத்து புதிய இயக்குநர் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அது கொஞ்சம் பேன்டஸி படம். இவ்வாறு அவர் கூறினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!