
கன்னடத்தில் அறிமுகமாகும் மிஷா நரங்
இதுகுறித்து மிஷா நரங் கூறியதாவது: கேஜிஎப், காந்தாரா படங்கள் மூலம் கன்னட சினிமா, உலகத்தின் கவனத்தை பெற்றிருக்கும் நேரத்தில் நான் கன்னடத்தில் அறிமுகமாவது பெருமையாக உள்ளது. எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழியை, கலாச்சாரத்தை கற்றுக் கொள்ள நினைப்பேன். தெலுங்கு, தமிழை ஓரளவுக்கு கற்றுக் கொண்டேன். இப்போது கன்னடம் கற்று வருகிறேன். அதோடு நேரம் கிடைக்கும்போது கர்நாடக மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து அந்த மக்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
மைசூரில் படப்பிடிப்பு நடந்தபோது புகழ்பெற்ற சாமுண்டி மலைகள் மற்றும் மைசூர் அரண்மனையை சுற்றிப் பார்த்தேன். சாமுண்டேஸ்வரி கோவிலில் நேர்மறையான அதிர்வுகளை உணர்ந்தேன். அதனால் கன்னட சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. என்கிறார் மிஷா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!