
புஷ்பா குழு : 5 நாள் நடைபெற்ற சோதனை நிறைவு
இந்நிலையில் அந்நிறுவனத்திலும், "புஷ்பா" பட இயக்குனர் சுகுமார் இல்லத்திலும் கடந்த வாரம் வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை சோதனை நடத்தின. கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த இந்த சோதனை நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
இதில் பெரிய அளவில் எதுவும் சிக்கவில்லை என்றும், சில சிறிய தவறுகள் நடைபெற்றுள்ளது மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை விரைவில் சரி செய்ய சோதனையிட்ட துறையினர் கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோதனையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "புஷ்பா 2" படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது என்றும் சொல்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!