
தன்னை விமர்சித்த தயாரிப்பாளருக்கு கிண்டலாக பதிலடி கொடுத்த சமந்தா
அதில் அவர் கூறும்போது, சமந்தாவின் மார்க்கெட் இனி அவ்வளவுதான்.. அவருடைய பணத்தேவைக்காகத்தான் புஷ்பா படத்தில் ஊ அண்டாவா என்கிற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்.. தனது படங்களின் ரிலீஸ் சமயத்தில் எல்லாம் கண்ணீர் விட்டு சென்டிமென்டாக பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.. எல்லா நேரமும் அது ஒர்க் அவுட் ஆகாது: என்று கூறியிருந்தார். இதுபற்றி சமந்தா உடனடியாக பதிலடி கொடுக்கவில்லை.. ஆனால் தற்போது அந்த தயாரிப்பாளரின் பெயரை குறிப்பிடாமல் அதே சமயம் அவருக்கு கிண்டலாக மறைமுக பதிலடி கொடுத்துள்ளார் சமந்தா.
சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்கிரீன் ஷாட் ஒன்றை ஷேர் செய்து இருந்தார். “எப்படி மனிதர்கள் காதுகளில் முடி வளர்க்கிறார்கள்” என்பது பற்றிய கூகுள் தேடலின் ஸ்கிரீன் ஷாட் தான் அது. எதற்காக இதை சமந்தா ஷேர் செய்துள்ளார் என பலருக்கும் குழப்பம் ஏற்படலாம்.. சமந்தாவை விமர்சித்த தயாரிப்பாளர் சிட்டிபாபுவின் காதுகளில் அதிக அளவில் முடி வளர்ந்து இருக்கும்.. இதனை சுட்டிக்காட்டி அவரை கிண்டலடிக்கும் விதமாகவே இப்படி ஒரு கூகுள் தேடல் ஸ்க்ரீன் ஷாட்டை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு பதிலடி கொடுத்துள்ளார் சமந்தா என்று நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!