
கமல் - எச்.வினோத் கூட்டணி இணையும் படம் நவம்பரில் துவக்கம்?
இந்த நிலையில், தனது அடுத்த படத்தை தனுஷை வைத்து இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையே கமல்ஹாசனிடமும் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளார் எச்.வினோத். கமல்ஹாசன், ஷங்கர் இயக்கும் "இந்தியன்-2" படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இதன் படப்பிடிப்பு நடந்தது. இதையடுத்து கிளைமாக்ஸ் காட்சி மே மாதம் நடக்கிறது. அதோடு "இந்தியன் 2" படத்தின் ஷுட்டிங் முடிகிறது.
இதனை முடித்ததும் எச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு நவம்பரில் துவங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்தை அடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகத் தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!