
டுவிட்டருக்கு குட் பை சொன்ன யாஷிகா : எல்லோரையும் வெளியேற சொல்லி அறிவுறுத்தல்
அதன்படி மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும் எவரும் ப்ளூ டிக் பெற முடியும். அந்த தொகையை கட்டவில்லை என்றால் அங்கீகரிக்கப்பட்ட கணக்காக இருந்தாலுமே ப்ளூ டிக் நீக்கப்பட்டுவிடும். அந்த வகையில் நேற்று ஒரேநாளில் அரசியல் சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல பிரபலங்களின் டுவிட்டர் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. நடிகை யாஷிகாவின் டுவிட்டர் ப்ளூடிக் நீக்கப்பட்டுவிட்டது.
இதனால் கடுப்பான யாஷிகா, "நான் டுவிட்டரிலிருந்து வெளியேறுகிறேன். காசு கொடுத்து அங்கீகரிக்கப்பட்ட கணக்காக இருக்க முடியாது. டுவிட்டரிலிருந்து பிரபலங்கள் அனைவருமே வெளியேற வேண்டும். டுவிட்டரின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் பிரபலமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ஷாருக்கான் என பல பிரபலங்களின் டுவிட்டர் கணக்கின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!