
லப்பர் பந்து படப்பிடிப்பு தொடங்கியது
மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த மார்ச் முதல் வாரத்தில் துவக்க விழா பூஜை நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து பணியாற்றிய முதல் படமான "கனா"வும் கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!