தனுஷ் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ருதிஹாசன்
ஏப் 20, 2023
Advertisement
நடிகர் தனுஷ் நடித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த 2012ம் வெளிவந்த திரைப்படம் 3. தனுஷிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். அந்த சமயத்தில் இருந்து இப்போது வரை தனுஷ் - ஸ்ருதிஹாசன் இருவரையும் இணைத்து பல கிசுகிசுக்கள் வெளிவந்தது.
சமீபத்தில் ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டியில் இந்த கிசுகிசு குறித்து பேசி இருக்கிறார். அதன்படி , "இந்த செய்தி குறித்து பலமுறை நான் விளக்கம் அளித்தும் ஏன் இது எங்களை இன்றும் பின் தொடர்கிறது எனத் தெரியவில்லை. இது ஒன்று மட்டுமல்ல, என்னை சுற்றி இதுபோன்ற ஆயிரம் வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது. என் வாழ்க்கையில் தனுஷ் ஒரு முக்கியமான நண்பர்.
3 படத்தில் நான் நன்றாக நடிப்பேனா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தபோது, என் மீது அவர் நம்பிக்கை வைத்தார். இதுபோன்ற வதந்திகள் வருவதால் நான் மக்களை குறை சொல்ல விரும்பவில்லை. அதற்காக, எப்போதும் என் மீது சிப் பொருத்தி நான் போகும் இடம் எல்லாம் பாருங்கள் என்று நான் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!