
திரைப்பட கல்லூரி மாணவர்களின் பேய் படம்
திரைப்படக் கல்லூரியில் படித்த நித்தியானந்தம் இயக்குகிறார். கீதாகரன் ஒளிப்பதிவு செய்கிறார். யதீஷ் இசை அமைக்கிறார். பாரீஸ் ஜெயராஜ் படத்தின் முக்கிய வேடத்தில் நடித்த விவாந்த் நாயகனாக நடித்துள்ளார். "மைடியர் பூதம்" திரைப்படத்தில் குழந்தை நாயகனாக மிரட்டிய பரம் விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு மைதிலி, பிஜாய் மேனன், ஆக்க்ஷன் பிரகாஷ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: துஷ்ட ஆவி ஒன்று சிறுவனை ஆக்ரமிக்க முயல அதிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்க அந்த சிறுவனும் அவர் தந்தையும் போராடும் திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த படம். ரசிகர்களை இருக்கை நுனியில் பதைபதைப்போடு பார்க்க வைக்கும். இது ஒரு திரைப் படக் கல்லூரி மாணவர்களின் மாறுபட்ட படைப்பு. என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!