
திரையுலகில் என் வெற்றி ஒரே இரவில் நடந்து விடவில்லை - பூஜா ஹெக்டே
அவர் கூறியது, திரையுலகில் என் வெற்றி ஒரே இரவில் சுலபமாக நடந்து விடவில்லை. தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க எனக்கு மொழி தெரியாது என்பதால் கஷ்டமாக இருந்த நிலையில் வசனங்களை உதவி இயக்குனர்களை பேச வைத்து பயிற்சி எடுத்து கொண்டேன். நான் நடித்த படங்கள் சரியாக ஓடாத நிலை இருந்தது. ஒரு வருடம் எந்த படவாய்ப்பும் வராமல் இருந்தது. திடீரென்று பட வாய்ப்புகள் குவிந்து மீண்டும் பிஸியாக நடித்து வருகிறேன். இப்போது நான் நல்ல நிலையில் இருந்தாலும் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களை திரும்பி பார்க்கிறேன். எனக்கு நிறைய கனவு கதாபாத்திரங்கள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்குள் உள்ள தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!