
புஷ்பா - வருமான வரி சோதனையுடன் அமலாக்கத் துறையும் சோதனை
தற்போது விஜய் தேவரகொன்டா, சமந்தா நடிக்கும் "குஷி", அல்லு அர்ஜுன் நடிக்கும் "புஷ்பா 2" ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது. அடுத்து சில பிரம்மாண்டப் படங்களையும் தயாரிக்க உள்ளது.
இந்நிலையில் அந்நிறுவனத்தின் அலுவலங்களில், "புஷ்பா" இயக்குனர் சுகுமார் இல்லத்தில் நேற்று முதல் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருகிறது. இன்று இரண்டாவது நாளாகவும் சோதனை தொடர்கிறது. வரி ஏய்ப்பு ஏதும் நடந்துள்ளதா என சோதனை நடைபெறுவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்நிய முதலீடு குறித்து அமலாக்கத் துறையும் சோதனை நடத்தி வருகிறதாம்.
முறையான விதிகளை கடைபிடிக்காமல் வெளிநாடுகளிலிருந்து சுமார் 500 கோடி அளவிற்கு மைத்ரி நிறுவனம் பணத்தைப் பெற்றுள்ளதாக சந்தேகப்பட்டு சோதனை நடப்பதாகச் சொல்கிறார்கள். இந்த சோதனைகளால் தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!