பவன் கல்யாண் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன்
ஏப் 20, 2023
Advertisement
கேரளத்துப் பைங்கிளியான பிரியங்கா அருள்மோகன், 2019ல் வெளிவந்த "ஒந்த் கதே ஹெல்லா" என்ற கன்னடப் படம் மூலம்தான் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப் பின் தெலுங்கில் நானி ஜோடியாக "கேங் லீடர்" படத்தில் அங்கு அறிமுகம் ஆனார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக "டாக்டர்" படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து "எதற்கும் துணிந்தவன், டான்" ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷ் ஜோடியாக "கேப்டன் மில்லர்" படத்திலும், ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கடுத்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்க உள்ளார். சுஜித் இயக்கத்தில் பவன்கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் "ஓஜி" என்ற படத்தில் பிரியங்கா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது.
100 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக இப்படம் உருவாக உள்ளது. தெலுங்கில் டாப் ஹீரோ ஒருவருடன் பிரியங்கா நடிப்பது இதுவே முதல் முறை.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!