அமெரிக்காவில் 1000 காட்சிகளுடன் வெளியாகும் பொன்னியின் செல்வன் 2
ஏப் 19, 2023
Advertisement
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள "பொன்னியின் செல்வன் 2" படம் அடுத்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் கடந்த வருடம் வெளியான முதல் பாகத்தைப் பார்க்க அவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டினார்கள். வெளிநாடுகளில் இதுவரையில் தமிழ்ப் படங்கள் வெளியாகாத சில ஊர்களில் கூட படம் வெளியானது.
அமெரிக்காவில் முதல் பாகத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அதைவிட இரண்டாம் பாகத்திற்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியாக இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில் பிரிமீயர் காட்சிகளுக்கான முன்பதிவு ஆரம்பமாகி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சராசரியாக 25 டாலர் அதற்குக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் தமிழ்ப் படங்கள் வார இறுதி நாட்களில்தான் அதிகக் காட்சிகளுடன் வெளியாகும். "பொன்னியின் செல்வன் 2" படத்தைப் பொறுத்தவரையில் 1000க்கும் மேற்பட்ட காட்சிகளில் திரையிடப்பட உள்ளதாம். இதுவரையில் எந்த ஒரு தமிழ்ப் படமும் இவ்வளவு அதிகமான காட்சிகள் திரையிடப்பட்டதில்லை என்பது கூடுதல் தகவல்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!