
மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் விஜய்?
இந்த நிலையில் அடுத்தபடியாக அட்லீ இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில் தெலுங்கில் கிராக், வீரசிம்ஹா ரெட்டி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கோபிசந்த் மலினேனி, விஜய்யை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறாராம். அந்த கதை விஜய்க்கு பிடித்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு கோபி சந்தை பொறுத்தவரை ஹீரோக்களை மாஸாக காட்டக் கூடியவர் என்பதால் அவர் இயக்கத்தில் விஜய் அடுத்து நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!