
மறைந்த கிரேஸி மோகனின் மனைவி நளினி காலமானார்
தனது அசத்தலான நகைச்சுவை வசனங்களால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் கிரேஸி மோகன். நடிகர் கமலின் நெருங்கிய நண்பரான இவர் அவரின் ஏராளமான படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி உள்ளார். ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2019ல் மாரடைப்பால் அவர் மறைந்தார். இந்நிலையில் கிரேஸி மோனின் மனைவியான நளினி இன்று(ஏப்., 18) காலமானார்.
இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் பதிவு : ‛‛எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் நளினி கிரேஸி மோகன் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்"" என்று குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!