
சித்தப்பாவின் பெருமை பேசும் சித்தா
ஏப் 18, 2023
Advertisement
தமிழ் சினிமாவில் அம்மா, அப்பா, தாய்மாமன், தாத்தா, பாட்டி பெருமைகளை நிறைய பேசிவிட்டார்கள். சித்தப்பா என்பது சிறிய கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவே கடந்து போகும். அல்லது ஹீரோ அண்ணன் குழந்தைகளுக்கு சித்தப்பா என்று தொட்டுவிட்டுச் செல்லும். தற்போது சித்தப்பா என்கிற உறவின் பெருமையை சொல்லும் படமாக உருவாகிறது "சித்தா". காதலில் சொதப்புவது எப்படி, ஜில் ஜங் ஜக், அவள் படங்களை தயாரித்த ஏக்தா எண்டர்டெயின்மென்ட் இதனை தயாரிக்கிறது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படத்தை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். சித்தார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!