
ஏப்ரல் 21ல் அறிவித்தபடி புதிய படங்கள் வருமா?
அந்த இரண்டு படங்கள் தவிர பாண்டியகர்களைப் பற்றிய சரித்திரப் படமான "யாத்திசை", விமல் நடித்துள்ள "தெய்வ மச்சான், குலசாமி" ஆகிய படங்களும், மற்றும் "ஜம்பு மகரிஷி" என்ற படமும் ஏப்ரல் 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்படும் படங்கள் கடைசி நேரத்தில் வெளியீட்டிலிருந்து பல்வேறு காரணங்களால் பின் வாங்குகின்றன.
அடுத்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி "பொன்னியின் செல்வன் 2" படம் வெளிவருவதால் அதற்கடுத்த இரண்டு வாரங்களுக்குத் தியேட்டர்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதனால், இந்த வார வெளியீட்டில் எந்தப் பின்வாங்கலும் இருக்காது என்றே தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!