
மீண்டும் விஷால் - பாண்டிராஜ் கூட்டணி?
அடுத்து அருள்நிதி நடிக்க உள்ள ஒரு படத்துக்கு கதை எழுத உள்ளார் பாண்டிராஜ். அதோடு விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்தை இயக்க பாண்டிராஜ் பேசி வருகிறாராம். இருவரும் இணைந்து 2016ல் வெளிவந்த "கதகளி" படம் மிகவும் சுமாராகப் போன படம். அதற்குப் பிறகு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இணைய உள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.
தற்போது விக்ரம் நடிக்க "தங்கலான்" படத்தையும், சூர்யா நடிக்க "கங்குவா" படத்தையும் தயாரித்து வரும் அந்நிறுவனத்தின் அடுத்த படமாக விஷால், பாண்டிராஜ் படம் இருக்கும் என்கிறார்கள். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!