
‛சூர்யா 42 படத்தின் டைட்டில் ‛கங்குவா: வீடியோ வெளியிட்ட படக்குழு
இந்த படத்தின் டைட்டில் வீடியோ இன்று (ஏப்ரல் 16) காலை வெளியானது. அதில் படக்குழுவிற்கு ‛கங்குவா" என டைட்டில் வைத்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தின் இயக்குனர் வீடியோவை வெளியிட்டு தெரிவிக்கையில், ‛சூர்யா 42 படத்தின் தலைப்பை ‛கங்குவா" என அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். திரையில் நெருப்பின் வீரமும் வலிமையும் கொண்ட ஒரு கதாநாயகனாக நடிகர் சூர்யா இருப்பார். கம்பீரமான, தனித்துவமான அதே சமயம் சுவாரஸ்யம் தரக்கூடிய ஒரு கதையாக இது பார்வையாளர்களுக்கு அமையும். படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் பட வெளியீட்டுத் தேதியையும் அறிவிப்போம்” என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!