
நடிகராக அவதாரம் எடுத்த ஐபிஎஸ் அதிகாரி ஜாங்கிட்
இந்த படத்தின் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் தீரன் அதிகாரம் ஒன்று படம் உருவாக முக்கிய காரணமான முன்னாள் டிஜிபியான ஐபிஎஸ் அதிகாரி ஜாங்கிட் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் போலீஸ் அதிகாரியாகவே நடித்துள்ளார்.
இந்த படம் குறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் கூறியவை , " நான் போலீஸ் அதிகாரியாக நடித்த தமிழ் திரைப்படம் குலசாமி ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாகிறது. அப்பாவி சிறுமிகள் துன்புறுத்தப்படுவதையும், காவல்துறை அவர்களை எப்படி மீட்டு குற்றத்தை தர்க்கரீதியாக முடிவுக்குக் கொண்டு வருகிறது என்பதை பற்றிய உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம்." என பதிவிட்டு, இந்த படத்திற்காக வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த படத்திற்கு "ஜீ ஸ்டார்" மகாலிங்கம் இசையமைத்திருக்கிறார். விஜய் சேதுபதி இந்த திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் .


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!