
விலையுர்ந்த போனை தொலைத்த நடிகை
சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கும் ஷாலு கடந்த 9ம் தேதி அன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு விட்டு பின்னர் சூளைமேட்டில் உள்ள தனது தோழி வீட்டில் தங்கி உள்ளார். மறுநாள் எழுந்தபோது அவரது செல்போனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷம்மு நட்சத்திர ஓட்டலுக்கு சென்று கேமரா பதிவு காட்சிகளை ஆராய்ந்து பார்த்தார். அதில் செல்போனை யாரும் எடுக்கும் காட்சி பதிவாகவில்லை. சூளைமேட்டில் தான் தங்கிய தோழி வீட்டிலும் தேடிப்பார்த்தார். அங்கும் கிடைக்கவில்லை.
கடந்த சில நாட்களே தானே தேடிப்பார்த்து விட்டு தற்போது வேறு வழியில்லாமல் பட்டினப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அப்போது ஓட்டலில் தன்னோடு பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள், தோழி வீட்டில் தன்னோடு தங்கி இருந்தவர்கள் பட்டியலையும் கொடுத்துள்ளார். அதை வைத்து போலீசார் நண்பர்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஷாலு ஷம்மு தொலைத்த செல்போனின் விலை 2 லட்சம் ரூபாயாம். அந்த போனில் அவர் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் உள்ளனவாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!