
குழந்தையுடன் வந்த பெண்ணிற்கு உதவிய அஜித் குமார்
இந்நிலையில் கிலாஸ்கோவில் இ ருந்து சென்னைக்கு 10 மாத கைக்குழந்தையுடன் தனியாக ஒரு பெண் பயணம் செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு அஜித் செய்த உதவி குறித்து அந்த பெண்ணின் கணவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். விமான நிலையத்தில் குழந்தையுடன் பொருட்களையும் தூக்கி வந்துள்ள அந்த பெண்ணிடம் எனக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த உணர்வு எனக்கும் புரியும் எனக்கூறி அவரே அந்த பொருட்களை தூக்கி உதவியுள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் இன்ஸ்டாகிராமில் அஜித் குமாருடன் தன் மனைவி எடுத்த புகைப்படத்தோடு அஜித் குமாருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இப்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!