
விஜய் சேதுபதிக்கு பதிலாக மிர்ச்சி சிவா
இந்நிலையில் சூது கவ்வும் 2ம் பாகத்தை உருவாக்க தயாரிப்பாளர் சி.வி.குமார் முடிவு செய்துள்ளார். எம்.எஸ்.அர்ஜுன் இயக்கவுள்ளார். இவர் இயக்கிய முதல் படம் யங் மங் சங் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடிக்கவுள்ளார். சத்யராஜ், கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடிப்பார் என கூறுகின்றனர். படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 17 அன்று துவங்குகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!