
ஆர்ஆர்ஆர் தயாரிப்பாளரை ஜூனியர் என்டிஆரும் புறக்கணிக்கிறாரா?
அதேசமயம் ஆஸ்கர் விருது புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் ஆஸ்கர் விருது பெற்று ஊர் திரும்பிய பின் நடைபெற்ற அந்தப்படம் தொடர்பான நிகழ்வுகளில் எதிலுமே தயாரிப்பாளர் தனய்யா கலந்து கொள்ளவில்லை. படக்குழுவினர் அவருக்கு அழைப்பு அனுப்பினார்களா அல்லது அவர் வர மறுத்து விட்டாரா என்பது குறித்த விபரமும் வெளியாகவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ராம்சரண் பிறந்தநாள் பார்ட்டி, ஆர்ஆர்ஆர் குழுவினருக்கு தெலுங்கு திரையுலகம் நடத்திய பாராட்டு நிகழ்ச்சி என எதிலுமே இவர் கலந்து கொள்ளவில்லை.. அதற்கான காரணமும் தெரியவில்லை.
இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் சர்வதேச துணைத் தலைவரான ஜேம்ஸ் பாரெல் என்பவர் ஐதராபாத்தில் உள்ள ஜூனியர் என்டிஆர் வீட்டிற்கு விருந்தினராக வருகை தந்தார். அவருக்கு விருந்தளித்து உபசரிக்க ஜூனியர் என்டிஆர் ஏற்பாடு செய்த நிகழ்வில் இயக்குனர்கள் ராஜமவுலி, சுகுமார், கொரட்டலா சிவா ஆகியோருடன் பாகுபலி பட தயாரிப்பாளரான ஷோபு யார்லகடா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் எர்னேனி உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
ஆனால் இதிலும் ஆர்ஆர்ஆர் தயாரிப்பாளரான தனய்யா கலந்து கொள்ளவில்லை. ஆர்ஆர்ஆர் படக் குழுவினர்தான் தனய்யாவை புறக்கணித்து வருகிறார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது ஜூனியர் என்டிஆரும் தன் பங்கிற்கு அவரை புறக்கணித்து உள்ளாரோ என்று தெலுங்கு திரை உலகில் பலரும் பேச ஆரம்பித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!