
அனுமனை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் ராஜமவுலியின் புதிய படம்!
ஏப் 13, 2023
Advertisement
பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக இயக்கிய ராஜமவுலி, அதையடுத்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கினார். 1000 கோடி வசூலித்த அப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். அமேசான் காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக இயக்கிய ராஜமவுலி இந்த படத்தை மூன்று பாகங்களாக இயக்கப் போகிறாராம். அதோடு இப்படம் இந்து கடவுளான அனுமனை மையமாகக் கொண்ட கதையில் உருவாக இருக்கிறதாம். இதுவரை ராஜமவுலி இயக்கிய படங்களை காட்டிலும் கூடுதல் பட்ஜெட்டில் இந்தப்படம் உருவாக இருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!