ஏப்., 14 தமிழ் புத்தாண்டையே கொண்டாட வேண்டும் : நமீதா
Advertisement
Advertisement
ஏப்., 14 தமிழ் புத்தாண்டையே கொண்டாட வேண்டும் : நமீதா
ஏப் 13, 2023
அ நிறம் | அளவு
Advertisement
தமிழ் திரையுலகின் ஒருகால்த்தில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. திருமணம், குழந்தை பிறப்பால் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி உள்ளார். முழுக்க முழுக்க குழந்தைகளை பராமரிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாம் எல்லாரும் டிச.31ம் தேதியே புத்தாண்டாக கொண்டாடுகிறோம். அது நம் கலாச்சாரம் கிடையாது. ஏப். 14ம் தேதியே தமிழ் புத்தாண்டு, அது தான் நம் கலாச்சாரம். அந்நாளில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாடுங்கள். கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து, பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெறுங்கள். டிச. 31ம்தேதி நமக்கான புத்தாண்டு கிடையாது. ஏப்.14ம் தேதியே நாம் கொண்டாட வேண்டிய புத்தாண்டு.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!