
சென்னை Vs ராஜஸ்தான் போட்டியைப் பார்த்த நட்சத்திரங்கள்
நேற்று ராஜஸ்தான் அணியுடனான போட்டியை தனது சொந்த மைதானத்தில் சென்னை அணி விளையாடி தோல்வியுற்றது. நேற்றைய போட்டியையும் பல நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டு பார்த்தனர். விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர் தொகுதியைச் சேர்ந்த சிறுவர்களுடன் போட்டியைக் கண்டு ரசித்தார்.
நடிகை த்ரிஷா, பிந்து மாதவி, ஐஸ்வர்யா ராஜேஷ், மேகா ஆகாஷ், சதீஷ், ஹரிஷ் கல்யாண் நேற்றைய போட்டியைப் பார்த்தார்கள். ஐஸ்வர்யா அவரது "சொப்பன சுந்தரி" குழுவினருடன் வந்திருந்தார்.
மலையாள நடிகர்களான ஜெயராம், பிஜு மேனன் ராஜஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவித்து நேற்றைய போட்டியை ரசித்தார்கள். கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் தான் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கிறார். கேரளாவுக்காக ஐபிஎல் அணி எதுவும் இல்லாதது குறிப்பிட வேண்டிய ஒன்று.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!