
சூர்யா 42 படத்தின் டைட்டில் வெளியீடு எப்போது?
இந்த நிலையில் இப்படத்தை தயாரிக்கும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சூர்யா 42 வது படத்தின் டைட்டில் குறித்து ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், வருகிற ஏப்ரல் 16ஆம் தேதி காலை 9 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த டைட்டிலின் முதல் எழுத்து கே என்ற எழுத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்க, முக்கிய வேடத்தில் யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!