
இரண்டே ஆண்டில் நடிகை நிஹரிகா விவாகரத்து ?
கடந்த சில மாதங்களாகவே நிஹரிகா கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் என்று சொல்லப்பட்டது. கடந்த மாதம் நிஹரிகாவின் கணவர் வெங்கட சைதன்யா அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் நிஹரிகாவுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்து, அவரையும் அன்பாலோ செய்தார். ஆனாலும், நிஹரிகா அவரை பாலோ செய்து கொண்டுதான் இருந்தார்.
ஆனால், தற்போது நிஹரிகாவும் அவருடைய இன்ஸ்டாவிலிருந்து வெங்கட சைதன்யா சம்பந்தப்பட்ட புகைப்படங்களை நீக்கிவிட்டு அவரை அன்பாலோ செய்துவிட்டார். விரைவில் இருவரும் அவர்களது விவாகரத்து பற்றிய அறிவிப்பை வெளியிடலாம். நிஹரிகா சமீபத்தில் சொந்தமாக ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழிலும் படங்களைத் தயாரிப்பாரா என்பது இனிமேல்தான் தெரியும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!