முத்தமிட்ட பிறகு மன்னிப்பு கேட்ட நாக சைதன்யா - நடிகை ஓபன் டாக்
Advertisement
Advertisement
முத்தமிட்ட பிறகு மன்னிப்பு கேட்ட நாக சைதன்யா - நடிகை ஓபன் டாக்
ஏப் 09, 2023
அ நிறம் | அளவு
Advertisement
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் நாக சைதன்யா. இவருக்கு விவாகரத்து ஆன பிறகு இவரை குறித்த பல கிசுகிசு தகவல்கள் வெளியானது. நடிகை தக்ஷா நகர்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் "ராவணசூரா". இப்படத்தின் நேர்காணலில், 2022 இல் பாங்க ராஜூ படத்தில் நாக சைதன்யாவுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி பேசினார் தக்ஷா நகர்கர். அதில் " பெண்கள் மீது அதிக அக்கறை கொண்ட ஒரு இனிமையான மற்றும் எளிமையான மனிதர் நாக சைதன்யா "என்று பாராட்டினார். மேலும், நாக சைதன்யா ஒரு காட்சியில் முத்தமிடவோ அல்லது கட்டிப்பிடிக்கவோ நேரும்போதெல்லாம் மன்னிப்பு கேட்பார், அது அவரது மரியாதைக்குரிய தன்மை அது" என புகழாரம் சூட்டினார். இப்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!