
நீதிமன்றம் மூலம் போராடி படத்தின் டைட்டிலை பெற்ற ரம்யா
ஆம். தற்போது அவர் தயாரித்துள்ள படத்திற்கு சுவாதி முத்தின மலஹனியே என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது நடிகர் ரவிச்சந்திரன் படத்தின் ஹிட் பாடலின் முதல் வரி ஆகும். இந்த படத்தை ராஜ் பி.ஷெட்டி கதாநாயகனாக நடித்து இயக்குகிறார் ஆர்ஜே ஸ்ரீ ரவிகுமார் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்..இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் தானும் ஒருவராக இணைந்துள்ளார் ரம்யா..
இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் பிரபல கன்னட இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு என்பவர் இந்த படத்தின் டைட்டிலை ரம்யா பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், தான் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இயக்கிய பன்னட கெஜ்ஜே என்கிற படத்தில் இந்த பாடல் வரி இடம் பெற்றிருந்ததாகவும் அதற்கு பின்னர் சில வருடங்கள் கழித்து இந்த பாடல் வரி கொண்ட டைட்டிலை வைத்து அம்பரீஷ் சுகாசினி நடித்த படம் ஒன்றை இயக்கியதாகவும் கூறியுள்ள அவர் இந்த டைட்டிலை ரம்யா பயன்படுத்தக் கூடாது என கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரம்யா இந்த படத்தின் டைட்டிலை பயன்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் ரம்யா.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!