
வாத்தி மொத்த வசூல் : தெலுங்கிலும் ஜெயித்த தனுஷ்
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலுமே இப்படம் 100 கோடி வசூலைக் கடந்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்தின் தியேட்டர் வசூல் ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தின் மொத்த வசூல் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது.
தெலுங்கு மாநிலங்களில் 43 கோடியும், தமிழகத்தில் 42 கோடியும், கர்நாடகாவில் 8 கோடியும், கேரளாவில் 1 கோடியும், இதர மாநிலங்களில் 1 கோடியும், வெளிநாடுகளில் 25 கோடியும் வசூலித்து மொத்தமாக 120 கோடி வரை வசூலித்துள்ளதாம். இதில் ஷேர் தொகையாக மட்டுமே 63 கோடி வரை கிடைத்துள்ளது.
35 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்ற இப்படம் 36 கோடி வசூலித்த பிறகுதான் லாபம் பார்க்க முடியும் என்ற கணக்கு இருந்தது. அதை மீறி ஷேர் தொகை 63 கோடி வந்ததால் இப்படம் சுமார் 27 கோடி வரை லாபத்தைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் தனுஷுக்கு தற்போது தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!