
ஏப்ரலில் அடுத்தடுத்து வெளியாகும் சரித்திரப் படங்கள்
இந்த ஏப்ரல் மாதத்தில் வாரம் ஒரு சரித்திரப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இன்று ஏப்ரல் 7ம் தேதி, சுதந்திர காலக் கதையுடன் "ஆகஸ்ட் 16, 1947" படம் வெளியாகி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகி உள்ளது.
அடுத்த வாரம் ஏப்ரல் 14ம் தேதி சமந்தா நடித்துள்ள "சாகுந்தலம்" தெலுங்குப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அதற்கடுத்த வாரம் ஏப்ரல் 21ம் தேதி ஏழாம் நூற்றாண்டை மையமாகக் கொண்ட சரித்திரப் படமான "யாத்திசை" படம் வெளியாக உள்ளது. அதற்கும் அடுத்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி சோழர்களின் வரலாறை மையமாகக் கொண்ட சரித்திரப் படமான "பொன்னியின் செல்வன் 2" படம் வருகிறது.
இந்த 2023ல் இப்படி அடுத்தடுத்த வாரங்களில் சரித்திரப் படங்கள் வெளிவருவது அதிசய நிகழ்வுதான்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!