
பிச்சைக்காரனுக்கு எதிராக வழக்கு
படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கு தடைகோரி மாங்காடு மூவீஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராஜகணபதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “நான் தயாரித்த "ஆய்வுகூடம்" என்ற படத்தின் கருவையும், வசனத்தையும் பயன்படுத்தி பிச்சைக்காரன் 2 படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக கொடுத்த பிறகே படத்தை வெளியிட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு விஜய் ஆண்டனிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 12ம் தேதிக்கு தள்ளி வைத்தது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!