
நானிக்கு முதல்முறை... - ரூ.100 கோடி வசூலைக் கடந்த தசரா
தற்போது இப்படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். நானி கதாநாயகனாக நடித்த படமொன்று 100 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. நானி, கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பு, சந்தோஷ் நாராயணன் இசை, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு ஆகியவை இந்தப் படத்தில் அதிகம் பாராட்டப்பட்டது.
100 கோடி வசூலைக் கடந்ததன் மூலம் நானி, தெலுங்கு கதாநாயகர்கள் வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை மூன்றாம் கட்ட கதாநாயகனாக மட்டுமே இருந்த நானி, இந்தப் படத்தின் வெற்றி மூலம் முன்னணி கதாநாயகர்களுடனும் போட்டி போட ஆரம்பித்துள்ளார்.
"தசரா" படத்தை பல தெலுங்கு சினிமா பிரபலங்களும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!