
விடுதலை - தெலுங்கில் ஏப்ரல் 15ல் ரிலீஸ்
இப்படத்தைத் தெலுங்கில் "விடுதலா" என்ற பெயரில் ஏப்ரல் 15ம் தேதி வெளியிடுகிறார்கள். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி தெலுங்குத் திரையுலகில் ஏற்கெனவே அறிமுகமான ஒரு நடிகர். வெற்றிமாறனின் படங்கள் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டும், ரீமேக் ஆகியும் உள்ளன.
"பொல்லாதவன்" படம் "குர்ராடு" என்ற பெயரிலும், "அசுரன்" படம் "நரப்பா" என்ற பெயரிலும் ரீமேக் ஆகி உள்ளது. இளையராஜாவின் இசை பற்றி தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
தெலுங்கில் ஏப்ரல் 14 அன்று சமந்தா நடித்துள்ள "சாகுந்தலம்" படம் வெளியாகிறது. அப்படத்துடன் "விடுதலை" படமும் வெளியாவது ஆச்சரியம்தான். அல்லு அர்ஜுனின் அப்பா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இப்படத்தைத் தெலுங்கில் வெளியிடுகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!