
ஏப்ரல் 21ல் பொன்னியின் செல்வன் 1 மீண்டும் ரிலீஸ் ?
அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகியது. அனைத்து மொழிகளையும் சேர்த்து 26 மில்லியன் பார்வைகளை யு டியுபில் கடந்துள்ளது. இதனிடையே, "பொன்னியின் செல்வன் 2" வெளியாவதை முன்னிட்டு, அதற்கு ஒரு வாரம் முன்னதாக ஏப்ரல் 21ம் தேதி "பொன்னியின் செல்வன் 1" படத்தை வெளியிட உள்ளதாக இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள பார்த்திபன், “மணிசாரிடம் ஒரு விருப்பம் தெரிவித்தேன். PS2-வுடன் PS1-ஐயும் ஒரு சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாகப் பார்க்க வசதியாக இருக்குமென…
அவர் பதில்….,” என மணிரத்னத்தின் வாட்சப் பதிலை வெளியிட்டுள்ளார். அதில்தான் மணிரத்னம் முதல் பாக வெளியீடு பற்றி பதிலளித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற "பொன்னியின் செல்வன் 2" டிரைலர் வெளியீட்டின் போது "பொன்னியின் செல்வன்" படத்தின் முதல் பாகத்தையே தான் இன்னும் பார்க்கவில்லை என பார்த்திபன் பேசியிருந்தார். அதை பல ரசிகர்களும் கிண்டலடித்திருந்தனர்.
ஏப்ரல் 21ல் முதல் பாகம் மீண்டும் வெளியாகும் போதாவது பார்த்திபன் பார்ப்பாரா ?. ஒரு வேளை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் சுயநலமாக முதல் பாகத்தை மீண்டும் வெளியிடுங்கள் என கேட்டிருப்பாரோ ?.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!