
ரஜினியின் ஜெயிலர் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி படமானது!
அவர் கூறுகையில், ஜெயிலர் படத்தின் அனைத்து சண்டைக் காட்சிகளுமே சிறப்பாக வந்துள்ளது. அதிலும் இந்த படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மிகப் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்த் இந்த ஜெயிலர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிகவும் ஆக்டிவாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும் அவர் காட்டிய ஈடுபாடு வியப்பாக இருந்தது. அதனால் ஜெயிலர் படத்தின் சண்டை காட்சிகள் ரஜினி ரசிகர்களை பெரிய அளவில் கவரக்கூடியதாக இருக்கும் என்று ஸ்டண்ட் சில்வா தெரிவித்திருக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!