
பின்னணி பாடகி ராக்ஸ்டார் ரமணி அம்மாள் காலமானார்
சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த இவர் 2017ல் ஜீ தமிழில் ஒளிபரப்பான ச ரி க ம ப சீனியர்ஸ் என்ற பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரலாமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின் "ராக்ஸ்டார்" ரமணி அம்மாளாக வலம் வந்த இவர் ‛ஜூங்கா, சண்டக்கோழி 2, காப்பான், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" உள்ளிட்ட படங்களில் பாடி உள்ளார். மேலும் பல வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடி உள்ளார்.
ரமணி அம்மாள் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலர் சமூக வலைத்தளம் மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!