
கைமாறிய அருண் விஜய் படம் : தலைப்பும் மாற்றம்
இந்த படத்தை 70 நாட்களில் ஏ.எல்.விஜய் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு எமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார். அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். லண்டன் சிறையில் வாடும் தவறாக தண்டிக்கப்பட்ட கைதிகளை மீட்கிற கதை. ஜீ.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!