
ஏப்ரல் 14, தமிழ்ப் புத்தாண்டு படங்கள் வெளியீடு அறிவிப்பு
இந்தாண்டு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நான்கைந்து படங்கள் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்துள்ள "ருத்ரன்", யோகிபாபு நடித்துள்ள "யானை முகத்தான்", விஜய் ஆண்டனி நடித்துள்ள "தமிழரசன்", ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள "சொப்பன சுந்தரி", மகேந்திரன் நடித்துள்ள "ரிப்பப்பரி", அருள் நிதி நடித்துள்ள "திருவின் குரல்", ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அவற்றுடன் தெலுங்கில் சமந்தா நடித்து உருவாகியுள்ள "சாகுந்தலம்" படமும் தமிழில் டப்பிங் ஆகி வெளியாகிறது.
இந்த வருட தமிழ்ப் புத்தாண்டிற்கு இதுவரையில் 6 நேரடி தமிழ்ப் படங்களின் வெளியீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மேலும் சில படங்கள் சேருமா அல்லது நீங்குமா என்பது அடுத்த வாரம்தான் தெரியும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!