
மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக ஹனி ரோஸ்
தமிழில் "காந்தர்வன்" உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த ஹனிரோஸ் மலையாளத்திலும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்த நிலையில் அவர் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்ததும் தெலுங்கில் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளார். இதற்கு காரணம் பாலகிருஷ்ணா அவருக்கு அளித்து வரும் ஆதரவு என்கிறார்கள்.
"வீர சிம்ஹா ரெட்டி" படத்தின் புரமோசன் பணிகள், வெற்றி விழாக்களில் பாலகிருஷ்ணா ஹனிரோசுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தெலுங்கு திரையுலகம் ஆச்சர்யத்துடன் பார்த்தது. இப்போது தனது அடுத்த படத்திலும் ஹனிரோசுக்கு வாய்ப்பளித்திருக்கிறார் பாலகிருஷ்ணா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!