அடம்பிடித்த சிறுமி : வீடியோ காலில் வந்து இன்ப அதிர்ச்சி தந்த விஜய்
மார் 31, 2023
Advertisement
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛லியோ" படத்தில் நடித்து வருகிறார். அவருடன் திரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது. தற்போது சென்னை திரும்பி உள்ள படக்குழு ஓய்வில் உள்ளனர். விரைவில் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த அபிதா பேகம் என்ற சிறுமி நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என அடம்பிடித்த காட்சியை அவரது குடும்பத்தார், வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ விஜய்யின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து நடிகர் விஜய், அச்சிறுமியை போனில் தொடர்பு வீடியோ காலில் பேசினார். மேலும் அவரது குடும்பத்தாரிடமும் கலந்துரையாடினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!