
பிரதீப் ரங்கநாதனுடன் நடிக்க தயங்கும் நடிகை
இதனிடையே கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த கொரோனா குமார் படத்தில் ஒரு சில காரணங்களால் சிம்பு விலக, அவருக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் இப்படத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க ஒப்பந்தமானார். சிம்பு விலகிய நிலையில் பிரதீப் உடன் ஜோடியாக நடிக்க அதிதி தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி, சிவகார்த்திகேயன் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் அதிதி ஷங்கர், வளர்ந்து வரும் நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் ஜோடி சேருவதில் தயங்குகிறாராம்.
அதேசயம் இதுபற்றி படக்குழு தரப்பில் விசாரித்தால் கொரோனா குமார் படம் தொடர்பாக எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!