
கதாநாயகனாக 20 ஆண்டுகளை நிறைவு செய்த அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 2003ல் வெளிவந்த "கங்கோத்ரி" என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கின் பிரபலமான இயக்குனராக கே ராகவேந்திர ராவின் 100வது படம் அது.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள அல்லு அர்ஜுன் தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளிலும் அவருக்கென ரசிகர்களை வைத்துள்ளார். தற்போது "புஷ்பா" படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
கதாநாயகனாக 20 வருடங்களை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, “இன்று, திரையுலகில் என்னுடைய 20 வருடங்களை நிறைவு செய்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும், அன்பால் நனைந்தவனாகவும் இருக்கிறேன். திரையுலகத்தில் உள்ள அனைவருக்கும் எனது நன்றிகள். ரசிகர்கள், பார்வையாளர்கள், அபிமானிகளால் தான் நான் இப்படி இருக்கிறேன். என்றென்றும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!