
எஸ்டிஆருக்கு அடுத்த வெற்றியைத் தருவாரா பத்து தல ஏஜிஆர்?
ஆனால், கடந்த சில ஆண்டுங்களாக அவரது படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று வருகின்றன. 2018ல் வெளிவந்த "செக்கச் சிவந்த வானம்", 2021ல் வெளிவந்த "மாநாடு", 2022ல் வெளிவந்த "வெந்து தணிந்தது காடு" ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன. இடையில், "வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன்" ஆகிய படங்கள் தோல்வியடைந்தாலும் சிம்புவின் வியாபாரம் குறையவில்லை.
அடுத்து சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள "பத்து தல" படம் இந்த வாரம் மார்ச் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் "ஏஜிஆர்" என்ற தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையில், கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், பிரிய பவானி சங்கர், அனு சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கன்னடத்தில் வெளியான "முப்டி" படத்தை தமிழுக்கு ஏற்றபடி ஒபிலி கிருஷ்ணா ரீமேக் செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!