
ஷங்கர், ராம்சரண் படப் பெயர் அறிவிப்பு : சிஇஓ அல்ல கேம் சேஞ்சர்
"கேம் சேஞ்சர்" என படத்திற்குப் பெயர் வைத்து அதற்கான மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். முதலில் இப்படத்திற்கு "சிஇஓ" எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அவையனைத்தையும் பொய்யாக்கி புதிய பெயரை அறிவித்துள்ளார்கள். மோஷன் போஸ்டர் காட்சிகள் அனைத்தும் அரசியல் தொடர்பான கிளிப்பிங்காக உள்ளன. எனவே இந்தப்படம் நிச்சயம் அரசியல் சார்ந்து பேசப்போகும் படம் என தெரிகிறது.
கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. "ஆர்ஆர்ஆர்" படத்திற்குப் பிறகு ராம் சரண் நடித்து வெளிவரும் படம் என்பதால் பான் இந்தியா படமாக இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!